Monday, 15 April 2013

சிவ சிவம்


வணக்கம் ஆன்மீக அன்பர்களே இந்த சிவ சிவம் டிராவல்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் வைகாசி விசாகம் திருச்செந்தூர் அன்னதானத்திற்க்கும் ,திருக்கோவில் உழவாரப்பணிகளுக்கும் செலவலிக்க படும் . ஒத்துழைப்பு தாருங்கள் . ஆன்மீகத்தை வளர்ப்போம் .
ஒவ்வரு மாதத்திற்க்கும் 40 நபர்கள் மட்டுமே .
நன்றி 
pls vist www.sivasivamtravels.com

Tuesday, 2 April 2013

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ?

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை !!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Saturday, 23 March 2013

மாபெரும் தவணை முறை ஆன்மீக பயணம்


தூத்துக்குடி பிரபஞ்சத்தின் சூரியன் அறக்கட்டளையும்(522/2010) சிவ சிவ டிராவல்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் தவணை முறையில் ஆன்மீக பயணம் .

                                                  செல்லும் இடங்கள்

  • ஹரித்வார்
  • ரிஸீகேஷ்
  • ஜெய்பூர்
  • டெல்லி
  • மதுரா
  • ஆக்ரா
  • அலகாபாத்
  • காசி
  • சாரநாத்
  • கயா
  • புத்தகயா
  • கல்கத்தா
  • பூரி
  • பூபனேஸ்வர் 


                                                              வசதிகள் 

  • சைவ உணவு 
  • பஸ் வசதி 
  • கார் வசதி 
  • ரோப் கார் 
  • போட்டிங்
  • ஹோட்டல் 
  • ரயில் கட்டணம் 
  • நுழைவு கட்டணங்கள் 
  • சுத்தமான குடிநீர்              


இவை அனைத்து செலவுகளும் சேர்த்து ரூபாய் 15,000 மட்டும் .

வேறு செலவுகள் கிடையாது.

மிக முன் அனுபவம் உள்ளவர்களால் நடைபெற்று வருகிறது .

மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியை கொடுத்து முன்பதிவு செய்யவும் .

மீதம் உள்ள தொகையை 8 தவனையாக செலுத்த வேண்டும் .

4 தவணை பயணத்திற்க்கு முன்பும் .

4 தவணை பயணத்திற்க்கு  பின்பும் செலுத்த வேண்டும் .

இதில் கிடைக்கும் லாபம் திருக்கோவில் உழவாரப்பணிகளுக்கும் , வைகாசி விசாக திருச்செந்தூர் அன்னதானத்திற்க்கும் பயன்படுத்தபடும்.

முன்பதிவு தொடர்புக்கு

S .J .RUTHRAN

9442815669 , 9442815661

EMAIL : ruthran23.5@gmail.com

குறிப்பு : மொத்தம் 90 நபர்கள் மட்டும் . செப்டம்பர் மாத பயணத்திற்க்கு
                                                                                                                                   

Sunday, 3 February 2013

இந்து மத கோவில்கள்

இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை அவசியம் படிக்க!

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும். முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும். இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

Thursday, 27 December 2012

வர்மம் - தோற்றமும், காலமும்


சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர்க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.


பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"

அகத்தியர் -

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளியஒடிவுமுறிவுசாரி என்ற நூலே மிக முக்கியமானதாக கருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிறது. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிறது.

Wednesday, 26 December 2012

சித்தர்களின் நிலை


ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். "அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

"ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?"

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”

குறள்: 314

Monday, 24 December 2012

மித்ரனின் பிறந்த நாள் தான் கிறிஸ்மஸ் தினமா


இந்த தகவலை திரு இக்பால் செல்வன் என்பவர் தனது கோடங்கி என்ற வலைதளத்தில் எழுதியுள்ளார் .

பண்டையக் கடவுள் மித்ரனின் பிறந்த நாள் தான் கிறிஸ்மஸ் தினமா

ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கமாகக் கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அது கிறித்தவ மத நிறுவனராகக் கருதப்படும் இயேசுவின் பிறந்த நாளாகவே அறிகின்றோம் அல்லவா. ஆனால் நீங்கள் சிந்தித்தது உண்டா ஏன் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மதச்சார்ப்பற்ற நாடுகளில் இதற்கு விடுமுறை வழங்கப்படுகின்றது. கிறிஸ்மஸ் ஐரோப்பியர்களிடம் பல ஆண்டுகள் கிறிஸ்தவப் பண்டிகையாகவே கொண்டாடப்பட்டு வந்தே போதும், உண்மையில் அப் பண்டிகை கிறிஸ்தவ மதம் நிறுவப்படும் முன்னரே அவர்களிடம் ஆழமாக ஊன்றிவிட்டது. 

சொல்லப் போனால் கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவுக்குப் பரவ முன்னரே காலம் காலமாக ஐரோப்பியர்கள், மத்திய கிழக்கினர்கள், வடக்கு ஆப்பிரிக்கர்கள், இந்தோ-ஆரியர்கள் எனப் பல இனங்களும் இந்தப் பண்டிகையை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், தினங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று கிறிஸ்மஸ் என்பது தீபாவளி போல மதச்சார்ப்பற்ற ஒரு பண்டிகையாக இன்று மாறிவிட்டது என்பதே உண்மை. கிறிஸ்மஸ் தினம் என்பது பண்டைய மதங்களில் இருந்து கிறித்தவர்களால் காப்பியடிக்கப்பட்டவை ஆகும். 

இயேசுக் கிறிஸ்து திசம்பர் 25 யில் பிறந்தமைக்கான எவ்வித சான்றுகளும் விவிலியத்தில் இல்லை. கத்தோலிக்கர்கள் பண்டைய பாரசீக - ரோமர்களின் குளிர்க்காலப் பண்டிகையைக் கிறிஸ்மஸாக மாற்றிக் கொண்டார்கள். திசம்பர் 25 ஆம் நாள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாரசீக - அசிறியர்களின் கடவுளான மித்ரனின் பிறந்த தினமாகவே கொண்டாடப்பட்டு வந்தது.

சூரியனிடமிருந்து பூமி தள்ளிப் போகும் தினத்தையே ( Winter Solstice ) அவர்கள் மித்ரனின் பிறந்த நாளாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். அதாவது பகல் வேளை சுருங்கி இரவு வேளை அதிகரிக்கும் குளிர்க்கால நாளை அவர்கள் மித்ரனின் பிறந்த நாளாகக் கருதினார்கள். அவர்களின் கணிப்புப் படி அதனை இன்றைய திசம்பர் 25 ஆகக் கணக்கிட்டார்கள். இந்தியக் நாட்காட்டியின் படி இதனை (தை)பூச மாததின் மகரச் சங்கராந்தி தினத்தில் நிகழ்வதாகக் கருதினார்கள். அதனாலேயேமகரச் சங்கராந்தி தினத்தில் சூரியன், இந்திரன் போன்றவர்களை இந்தியர்கள் வழிப்பட்டார்கள். இதனைத் தமிழர் பண்டிகையாக மாற்றியது தனிக் கதை அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். ஆனால் உண்மையில் நவீன அறிவியலின் கணிப்பின் படி அது திசம்பர் 20, 21 நாள்களிலேயே ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றது. 

இனி மித்ரனைப் பற்றியும், மித்ரன் இயேசுவாகப் புனையப்பட்டதையும் கவனிப்போமாக. மித்ரன் என்ற கடவுள் இன்றைய துருக்கி முதல் பார்சீகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன் வணக்கப்பட்டு வந்தான். துருக்கியின் மிட்டானி என்ற பகுதியில் கிடைத்த கல்வெட்டு மித்ரனின் பல தகவல்களைக் கொடுக்கின்றன. மித்ரன், இந்திரன், வருணன் ஆகிய கடவுளர்களும் பாரசீகத்தின் இந்தோ-ஆர்ய மக்களால் வணங்கப்பட்டு வந்தனர். இவையே பிற்காலப் பார்ப்பனர்களால் ரிக்கு வேதங்களில் பாடப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டன. 


இயேசுவைப் போலவே மித்ரன் (சூரியக்) கடவுளாகவும், (சூரியக்) கடவுளின் மகனாகவும் கருதப்பட்டர். இயேசுவைப் போலவே மித்ரன் கன்னித் தாயின் வயிற்றில் தோன்றினார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. மித்ரன் தனது தீ சக்தியால் அனைவரையும் பரிசுத்தப்படுத்துவார் எனவும் அவர்கள் கருதினார்கள். மித்ரனை இந்தோ-ஆரியர்கள், அசிறியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், பீனிசியர்கள் எனப் பலரும் வணங்கினார்கள். 

கிமு 100- ஐ சேர்ந்த பிளாவியஸ் ஐஜினஸ் (Flavius Hyginus) ரோமானியக் கல்வெட்டில் மித்ரனை சூரியக் கடவுளாக ரோமர்கள் போற்றுகின்றார்கள் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. . மித்ரன் சூரியனின் ஒளிவட்டமாகவும், நான்கு வெள்ளைக் குதிரையில் வருவார் எனவும் அம் மக்கள் நம்பினார்கள். இதே மித்ரனைத் தான் பார்ப்பனர்கள் சூரிய பகவனாகவும், ஏழு குதிரைப் பூட்டிய தேரில் வருவான் எனவும் புனைந்தார்கள். பார்சி மதத்தினர், மானி மதத்தினர் தமது கடவுளாகவும் மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட மகாயான பௌத்த மதத்தில் மித்ரனையே மைத்ரேய புத்தராகப் பிரச்சாரம் செய்தனர். பிற்காலக் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் அடங்கிய ஆபிரகாமிய மதத்தினர் இயேசுக் கிறிஸ்துவாகவும் / ஈஸா நபியாகவும் மாற்றிக் கொண்டார்கள். கிறித்தவர்கள் / இஸ்லாமியர்கள் இதே குதிரைப் புனைவையே நியாயந்தீர்க்கும் நாளில் மெஸியா / மக்தி வெள்ளைக் குதிரையில் வருவார் எனக் கூறுகின்றார்கள். ஆக உலகின் இன்றைய பெரும்பான்மை மதங்கள் அனைத்திலும் மித்ரன் வழிபாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் மித்ரன் மூன்று பரிணாமங்களை அடைந்தத்தாகக் கருதுகின்றனர். மித்ர - வேதக் கடவுள், மித்ரா - பாரசீக கடவுள், மித்ராஸ் - கிரேக்க-ரோமக் கடவுள். கிபி மூன்றாம் நூற்றாண்டு அளவில் மித்ரன் வெவ்வேறு பெயர்களில் இந்தியா முதல் ஸ்காட்லாந்து வரை மக்களால் வழிப்படப்பட்டு வந்தான். சுமார் 400-க்கும் மேற்பட்ட மித்ர வழிப்பாட்டு எச்சங்கள் இந்த நாடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க -ரோமானியர்கள் ஊடாக மித்ர வழிப்பாடு இன்றைய கிறித்தவ மதத்தில் பெருமளவில் உள்வாங்கப்பட்டுள்ளது. மித்ரனின் புராணத்துக்கும் - இயேசுவின் புராணத்துக்கும் மிக அதிகமான ஒற்றுமைகள் காணப்படுவதே இதற்குச் சிறந்த உதாரணமாகும். 
இயேசுவைப் போலவே மித்ரனுக்கு 12 சீடர்கள் இருந்தார்கள். 
இயேசுவைப் போலவே மித்ரன் பிறந்த போது ஆடு மேய்ப்பர்களால் அவன் சூழப்பட்டு இருந்தான். 
இயேசுவைப் போலவே மித்ரன் ஆசானாகவும், போதனையாளனாகவும் பல இடங்களுக்குப் பயணம் செய்தவன் எனவும் அறியப்படுகின்றான். 
மித்ரன் "சூரியனின் பெரிய எருது" என அறியப்பட்டு, தன்னையே உலகச் சமாதானத்துக்காகப் பலிக் கொடுத்தான். இயேசுவோ '' ஆட்டுக்குட்டியான்வர் '' என அறியப்பட்டுத் தன்னையே பலியாகக் கொடுக்கின்றார். 
இயேசுவைப் போலவே மித்ரன் சுவர்க்கத்துக்குச் சென்றான் எனவும் அறியப்படுகின்றது. 
மித்ரன் இயேசுவைப் போலவே உலக ஒளியாகவும், சத்திய வாக்காகவும் அறியப்பட்டான். 
மித்ரன் சிங்கமாகவும், ஆட்டுக்குட்டியாகவும் உவமைக் கொள்ளப்பட்டான். இயேசுவோ ஆட்டுக்குட்டியாக உவமை கொள்ளப்பட்டார். 
மித்ரனின் புனித நாள் ஞாயிற்றுக் கிழமை ஏனெனில் அவனே சூரியனாகவும், சூரியப் புத்திரனாகவும் இருக்கின்றான் என்பதால். கிறித்தவர்களும் யூதர்களைப் போலச் சனிக்கிழமையைச் சப்பத் தினமாக அனுசரிக்காமல் ஞாயிர்றுக் கிழமையையே சப்பத் தினமாக அனுசரிக்கின்றார்கள். 
மித்ராயிஸ மதத்தில் விருந்தோம்பல் வைபவமும் உள்ளது, கிறித்தவம் போன்றே. 
மித்ராயிஸ மதம் ஞானஸ்நானம், திருமுழுக்கை கடமையாக்கியுள்ளது. 
இயற்கையைக் கவனித்த நமது மூதாதையர்கள், அவற்றில் நிகழும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சில பல புனைவுகளையும், கடவுளர்களையும் உருவாக்கினார்கள். அதுவே பிற்காலத்தில் எழுந்த அரசியல் சார்ந்த பெரும் மதங்களால் உள்வாங்கப்பட்டுப் புராணங்களாக வடிக்கப்பட்டுவிட்டன. இன்று கிறிஸ்மஸ் தினம் கிறித்தவப் பண்டிகை என்ற நிலையைத் தாண்டி அது எங்குத் தொடங்கியதோ அங்கே செல்லத் தொடங்கியுள்ளது. பல எவாஞ்செலிஸ் கிறித்தவர்களே இயேசுப் பிறந்த தினம் திசம்பர் 25 ஆக இருக்க முடியாது எனக் கூறிவருகின்றார்கள். 

ஆகையால் பகுத்தறிவாளர்கள் இந்தப் பண்டிகையை வழக்கமான கேளிக்கையோடு மனைவி மக்களோடு தாராளமாகக் கொண்டாடலாம். அதே சமயம் புனைவுகள், கடவுளர்கள் எல்லாம் வெறும் கற்பனை என்பதையும், இயற்கையின் மாற்றங்களையும், காலநிலைகளையும் மனதாற விரும்பி அவற்றுக்கு நன்றி செலுத்துவோம் என்பதையும் நினைவில் நிறுத்தி நமது சந்ததியினருக்கும் எடுத்துரைப்போமாக.